St.Antony'sShrine
புனித அந்தோனியாரின் அழியா நாவிடம்...

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே! நீர் உமது நாவினால் இறைவனை எப்போதும் மகிமைப்படுத்தி வந்தீரே! நான் உமது நாவின் மேன்மையைக் கண்டு வணங்குகின்றேன்.
பாவத்தினால் கறைபடாத உமது நாவைப் போல எனது நாவையும் பாவக் கறை படாமல் பாதுகாத்தருளும். உம்மைப் போல் நானும் எனது நாவால் எப்போதும் இறைவனை புகழவும், இறைவார்த்தையை பிறருக்கு அறிவிக்கவும் வரம் அளித்தருளும்.
எனது நாவால் நான் இதுவரை செய்து வந்த அனைத்துப் பாவங்களுக்காகப் பாவமன்னிப்பையும் பெற்றுத் தந்தருளும். நான் எனது நாவை நல்லவற்றிற்காகவும், பிறருக்கு முன் மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு பாலனிடம் இருந்து எனக்கு இந்த நல்ல வரத்தை அடைந்து தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன் - ஆமென்