top of page
size1.jpg

கடல் மீன்களுக்கு மறையுரை

        ரிமினி என்னும் நகரம் அப்போது அந்தோனியாரின் விசாரணையிலிருந்தது. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் மெய்வழிக்குப் புறம்பாக நடந்து வந்தனர். இதைக் கண்ணுற்ற அந்தோனியார் மிகவும் கோபங்கொண்டார், கோபாவேசத்தோடு பிரசங்கம் செய்து மக்களை நல்வழிப்படுத்தினார். இதனால் வெகுண்டெழுந்த வேதவிரோதிகள் தங்களைச் சார்ந்த மக்களை அந்தோனியாரின் பிரசங்கத்துக்குப் போக கூடாதெனத் தடுத்துவிட்டனர்.


       அந்தோனியாரோ மனம் தளரவில்லை. ஒரு நாள் காலை, திருப்பணி முடிந்த கையோடு வெகுவேகமாக கடற்கரை நோக்கிச் சென்றார். அவரது விரோதிகள் ஏன் இப்படி அவசரமாகச் செல்கிறார் என்று அவருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். கடற்கரையை அடந்த அந்தோனியார், தம் கைகளைக் கடல்மேல் உயர்த்திக் கடலில்வாழும் மீன்களே நான் சொல்வதைக் கேளுங்கள், மனிதர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்க மறுத்து விட்டனர்.

 

           எனவே கடவுளின் வார்த்தையை உங்களுக்கு கூறவே நான் வந்தேன், என்று தன் மறையுரையைத் தொடங்கினார். கடலின் கொந்தளிப்பும் குழப்பமும் ஏற்பட வகைவகையான மீன்கள் அந்தோனியாரின் அருகில் கூடி, தங்கள் தலையை நீருக்குமேல் நீட்டி, கவனமாக மறையுரையைக் கேட்கத் தொடங்கின.

 

   அந்தோனியார் தொடர்ந்து “மீனினங்களே! என் சகோதரர்களே! நீங்கள் கடவுளுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கின்றீர்கள், ஏன்? இந்த எல்லையற்ற, பரந்து விரிந்த, ஆழ்கடலை உங்கள் உறைவிடமாகத் தந்தவர் அவரல்லவா? கொடிய புயலோ, கடல் கொந்தளிப்போ, காற்றோ, மழையோ, பெரு நெருப்போ, எதுவும் உங்களைத் தீண்டாத வண்ணம் அவர் பராமரிக்கிறார். கடல் கொந்தளிப்பானாலும் சரி, பேரலைகளானாலும் சரி, நீங்கள் மகிழ்வோடு ஓடியாட கடவுள் உங்களுக்குச் சிறப்பான எல்லை தந்திருக்கிறார். மேலும் உங்களுக்காக விதவிதமான உணவுகளையும் கடலில் கொடுத்திருக்கிறார்.

 

      உங்களுக்குப் பசி பஞ்சம், பட்டினி இல்லை. மழை பெய்ய வேண்டுமென்பதில்லை. பயிர் விளைய வேண்டுமென்பதில்லை. உங்கள் உணவுக்குப் பஞ்சமில்லை. கடவுள் உங்களைப் படைத்தபோது கடலில் நீங்கள் பலுகிப் பெருக வேண்டுமெனக் கட்டளையிட்டுள்ளார். அன்று கடவுள் வெள்ளப்பெருக்கால் மனுக்குலத்தையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும் அழித்தபோது உங்களை மட்டும் அழியவிடாது காப்பாற்றியிருக்கிறார்.

 

      இறைவாக்கினர் யோனாவை மீட்கும் தனிப் பெரும் உரிமையை உங்களுக்கல்லவா கடவுள் கொடுத்தார்? இயேசு கிறிஸ்து கப்பம் கட்டுவதற்கும் அவர் இறப்பதற்கு முன்னும் உயிர்தெழுந்த பின்னும் அவருக்கு உணவாவதற்கும் உரிமை பெற்றவர்கள் நீங்களன்றோ? படைப்புகளுள் இத்தகைய தனிப்பெரும் சலுகைகள் பெற்ற நீங்கள் மீட்பராம் ஆண்டவரை வாழ்த்துங்கள்! போற்றுங்கள்! துதித்தேத்துங்கள்! என்றார். 
               புனிதரின் மறையுரையை அமைதியோடு மீன்கள் கேட்டு, மறையரை முடிந்தபின் நீருக்குள் சென்றன. இந்த அதிசய சம்பவம் பெறும் பயனை விளைவித்தது. அது முதல் மக்கள் அந்தோனியாரின் மறையுரையைக் கேட்கத் திரளாக வந்தனர். சீரிய வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

 

St.Antony Preaches to the Fish

  St. Antony was preaching in Rimini where there were many, heretics. Desirous to bring them back to the light of the truth, he argued with them over their erroneous positions. But they stubbornly stuck to their errors, not only rejecting his arguments, but even walking away so that they would not have to listen to him.
         Therefore, St. Antony, inspired by God, went over to where the river runs into the sea. Standing on the shore, between the sea and the river, he began to call out in God’s name to the fish, inviting them to come to listen to his homily. He said, “Listen to the Word of the Lord, O fish of the sea and river, for the faithless heretics refuse to listen to it.” Immense school of fish, small and large, gathered near St. Antony. There were more than had ever been seen together in that region. They all raised their heads a little out of the water.
        Would that you could have seen the large fish alongside of the small ones, the small ones wiggling or swimming peacefully through the fins of the large ones. Would that you could have seen the different species of fish, each one swimming over to those like it, forming a miraculous garden of colours and shapes in front of the Saint. Would that you could have seen the multitude of large fish laid out like an army in line of battle, seeking to find the best place to listen to the preaching. Would that you could have seen the smaller fish placing themselves where the water was more shallow, arranging themselves (as if guided by God) without any aggressivity.

       Would that you could have seen the huge school of the smallest fish pushing up to the front like pilgrims who are seeking an indulgence, surrounding the Holy Father as if they were his defenders. This is how he preached, as if it were all laid out by the powers of heaven. In the first row there were the smallest fish, in the second those of moderate size, and finally, in deeper water, the largest fish. All of them listened attentively to what St. Antony was preaching.
       When his audience had taken its place, St. Antony solemnly began to proclaim, “My brother fish, you must give thanks today, each in your own way, to the Creator Who established that you dwell in such a noble element. You are able to live in salt or fresh water, whichever suits you. He gave you many places of refuge where you can flee from the violence of storms. He placed you in this clear and transparent element through which you can see so as to choose your route and find your food. The Creator Himself provides you with the nourishment which is necessary for life.
        “When God created the world, He gave you the command to multiply. During the flood, when all the other animals were wiped out (except for those in the ark), you were saved from destruction. Armed with fins and gifted with vigor, you swallowed Jonah and then  deposited him again unhurt on the dry land. You provided the Lord with the coin when, poor as He was, He had no money for the temple tax. you also, both before and after the resurrection, served as food for the Eternal King. On account of all these gifts, you are greatly obliged to praise and bless the Lord from whom you, among all the other animals, have received such unique blessings.
           To these and other similar words and exhortations, some fish responded by raising their voices, others opened their mouths and bowed their heads, praising the Most High in whichever manner they could. When St. Antony saw these expressions of reverence, he exalted in the Holy Spirit and cried out in a loud voice,” Blessed be the eternal God, for more fish of the sea praise Him than heretics. These animals without intelligence nevertheless know how to listen to the Divine Word while those people without faith do not!” As St.Antony continued his homily, the crowd of fish grew ever larger, with some of them leaving their assigned places.
                  The people in the city hurried over to see this miracle. Even the heretics came. When they observed this extraordinary and noteworthy wonder, they sincerely repented and they seated themselves at the feet of St. Antony to listen to his preaching. St.  Antony, beginning to speak, preached so wonderfully on the Catholic faith that all of the heretics living there were converted. Having strengthened their faith, he joyfully received them, blessing them. St. Antony then dismissed the fish, and they left playfully swimming out in different directions, filled with joy, bowing their heads to the Saint.
           The Saint preached there for many days, converting many heretics. His work bore much fruit.

bottom of page